பல்வேறு நாடுகளின் ராணுவ வீர‌ர்களுக்கு சென்னையில் பயிற்சி : கிரிகிஸ்தான் நாட்டு வீராங்கனைகள் 5 பேருக்கு பயிற்சி

சென்னை பரங்கிமலையில் உள்ள பயிற்சி மையத்தில், கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 ராணுவ வீராங்கனைகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-04-30 19:52 GMT
இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவ வீராங்கனைகள் 5 பேர், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர். பயிற்சி முடிந்த பின், அவர்கள் பல்வேறு பகுதியில் அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர். கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது வருகின்ற மே மாதம் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உடற்பயிற்சி, பல்வேறு துப்பாக்கிகளை பயன்படுத்தும் பயிற்சி, ஆங்கில பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்