வேட்புமனு பரிசீலனையின் போது கூச்சல் குழப்பம் : தாமதத்திற்கு பின்னர் தி.மு.க, அ.தி.மு.க மனுக்கள் ஏற்பு
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணம் தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டன.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணம் தலைமையில் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது திமுகவின் வேட்புமனு படிவங்களில் குளறுபடி இருப்பதாக அதிமுகவினரும், அமமுகவினரும் கூச்சலிட்டனர். அதிமுக வேட்பாளருக்கு இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக கூறி திமுக மற்றும் அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது தாமதத்திற்கு பிறகு இருதரப்பினரின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.