மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு : மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ்
விருதுநகர் மாவட்ட மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்ட மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவர், மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோத செயல்களும், அதிகளவு மதுபானமும் விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, டாஸ்மாக்கிருந்து எவ்வளவு மதுபானம் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர்த, மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.