"தேர்தல் செலவுக்கு 50 லட்ச ரூபாய் பணம் கொடுங்க..." : காந்தி வேடத்தில் வங்கிக்கு வந்த வேட்பாளர்
தேர்தல் செலவிற்கு, பணம் தேவைப்படுவதால், 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார் நாமக்கல் வேட்பாளர்.
தேர்தல் செலவிற்கு, பணம் தேவைப்படுவதால், 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார் நாமக்கல் வேட்பாளர். இதற்காக, அவர் காந்தி வேடம் போட்டு, வங்கிக்கு வந்தார். அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனரான ரமேஷ் தான் இந்த வேட்பாளர். தொகுதி முழுக்க பிரசாரம் செய்ய தமக்கு பணம் தேவைப்படுவதால் கடன் கேட்பதாகவும், தமது பாஸ்போர்ட்டை அடமானம் வைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.