கோவை : பறக்கும் படை சோதனையில் வெளிநாட்டு பணம் பறிமுதல்...
கோவையில், பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 43 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில், பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 43 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை, சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனத்தின் ஊழியர் ஜெயராம் என்பவர், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளின் பணத்துடன் விமானநிலையம் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒட்டிப்புதூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோவை மாவட்ட கருவூலத்துக்குக் கொண்டு சென்றனர். அந்த தொகைகளுக்கு முறையான ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் இந்திய மதிப்பு 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்பதால் வருமான வரித் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.