சிறுமிக்கு பாலியல் தொல்லை

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

Update: 2019-03-14 00:17 GMT
சென்னை மாடம்பாக்கத்தில், ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்த பாபு என்பவர், கடந்த சில நாட்களாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த தாம்பரம் மகளிர்  நிலைய போலீசார்,  பாபுவை ‛போக்சோ' சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்தனர்
Tags:    

மேலும் செய்திகள்