தியகராஜர் ஆராதனை விழா - பஞ்சரத்ன கீர்த்தனை பாடி கலைஞர்கள் இசை அஞ்சலி

திருவையாறு காவிரி கரையோரம் 172-வது தியாகராஜர் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-01-25 10:47 GMT
கர்நாடக இசை மரபை உருவாக்கியவரும், சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவருமான தியாகராஜர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருவையாறு காவிரிக் கரையில் அமைந்திருக்கும் அவருடைய சமாதியில் திரண்ட பல சங்கீத வித்வான்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பாடகி சுதா ரகுநாதன், மகதி உள்ளிட்ட பிரபலங்கள் சிலர் இதில் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்