சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னையில் விரைவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-05 10:39 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த நிலையில், 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில்,  தற்போது 913 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அதேபோல் சோழவரம் ஏரியில் தற்போது 48 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது  புழல், சோழவரம் ஏரிகளில் உள்ள தண்ணீரைக்கொண்டு அதிகபட்சமாக சென்னைக்கு 1 மாதம் மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னையில் விரைவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்