``17 வயது முதலே... பலாத்காரம்; மதமாற்றம்''... மனைவியும் உடந்தை..? - ஜானியின் சபல கொடூரங்கள்

Update: 2024-09-19 17:44 GMT

பெண் நடன இயக்குநர் அளித்த பாலியல் புகார் வழக்கில், கோவாவில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் டாப் நடன இயக்குநராக இருக்கும் ஜானி மாஸ்டர் வித்தியாசமான நடன அசைவுகளுக்கு பெயர் போனவர்...

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே காம்போவை பாப்புலராக்கிய புட்ட பொம்மா பாடலுக்கு மொழி தெரியாமலே பலர் வைப் செய்ய முக்கிய காரணமாக இருந்தவரும் இவரே...

இதே போல் தமிழிலும் பல ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார் ஜானி மாஸ்டர்..

இதில் திருச்சிற்றம்பலம் படத்தில் பறக்க பறக்க துடிக்குதே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது..

இப்படி திரைத்துறையில் டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜானி மாஸ்டர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியிலும் ஆக்டிவாக இருந்தார்..

இந்நிலையில் தான் அவர் மீது பெண் நடன இயக்குநர் ஒருவர் பாலியல் புகாரளித்திருந்தார். 21 வயதான அந்த பெண் 17 வயது இருக்கும் போது ஜானி மாஸ்டரின் நடனக் குழுவில் இணைந்ததாக கூறப்படும் நிலையில், அப்போதில் இருந்தே படப்பிடிப்புக்காக செல்லும் போதெல்லாம் தன்னை ஜானி மாஸ்டர் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் பணியில் இருந்து நீக்கி விடுவதோடு, சினிமா துறையில் பணியாற்ற முடியாத சூழலை ஏற்படுத்தி விடுவேன் என ஜானி மாஸ்டர் மிரட்டியதாகவும், பல முறை அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஜானி மாஸ்டரின் மனைவிக்கும் தெரியும் என திரையுலக வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், ஜானி மாஸ்டர் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாறி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது..

மேலும் பவன் கல்யாண், ஜானி மாஸ்டரை தனது கட்சியில் இருந்து நீக்கியதோடு, தெலுங்கு நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜானி.. தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடந்ததை எல்லாம் அறிந்த ஜானி மாஸ்டர் தலைமறைவான சூழலில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாத்துறையில் அடுத்தடுத்து நடந்தேறும் இதுபோன்ற சம்பவங்களும், சர்ச்சைகளும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.. 

Tags:    

மேலும் செய்திகள்