உயிருடன் கிடைக்கும் கரவலை மீன்கள்

கரவலை மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

Update: 2018-12-30 07:37 GMT
தூத்துக்குடியில் உயிருடன் கிடைக்கும் கரவலை மீன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி பெரிய துறைமுகம் கடற்கரையில் கரைவலை மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.  இவர்கள் கரையில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் சென்று வலைகளை விரித்து அதனுடைய நுனிபகுதியை கரைக்கு கொண்டு வருகின்றனர்.  இந்த வலையில் கிடைக்கும் மீன்கள், உயிருடன் கரைக்கு இழுத்து வரப்படுவதால் அதனை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்