புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் எமது செய்தியாளர் நடத்திய நேர்காணல்.
* மின்துறைக்கு ரூ. 200 கோடி, ரூ.25 கோடி ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கீடு
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.25 கோடி, பொதுப்பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* குடிநீர், நகராட்சி, பேரூராட்சிக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு
* நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா ரூ.5 கோடி
* திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு
* திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், தேனி தலா ரூ.1 கோடி நிதி
* இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை
* புயல் பாதிப்பில் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.