முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பி வெட்டிக்கொலை : தலைமறைவாக இருந்த 8 பேர் கைது

திருவள்ளூர் அருகே மேல்மணம்பேடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-10-01 04:18 GMT
திருவள்ளூர் அருகே மேல்மணம்பேடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த தங்கராஜ் தம்பி வெங்கட்ராமனை கடந்த 26-ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலையாளிகளை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், பண்ணூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்