சிசிடிவி காட்சிகள் தற்போது இல்லை - சுப்பையா விஸ்வநாதன்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி இயக்கவேண்டாம் எனக்கூறிய அதிகாரி தற்போது உயிருடன் இல்லை என அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-09-26 01:08 GMT
* ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த 7 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆஜராகி விளக்கமளித்தார். 
 
* இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆஜரான சுப்பையா விஸ்வநாதன், சிசிடிவி காட்சிகள் தற்போது இல்லை என்றும்,  (gfx in 2 ) சிசிடிவி இயக்க வேண்டாம் என கூறிய பாதுகாப்பு அதிகாரி இளங்கோவனும் தற்போது உயிருடன் இல்லை என வாக்குமூலம் அளித்தார். 
 
* மேலும் இளங்கோவனுக்கு சிசிடிவி இயக்க வேண்டாம் என உத்தரவிட்ட அரசு அதிகாரி குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார் . இதையடுத்து, விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டது . 
 
* இந்த பிரமாண பத்திரத்தில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக  மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்புகளை தயார் செய்து கொடுத்தது யார் ? 

* அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கும் வெளியிட்ட அறிக்கைக்கும் உள்ள முரண்பாடுகளுக்கான காரணம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்