ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி
ஆடி அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
* திருச்செந்தூர் கடலில் புனித நீராடிய திரளான மக்கள், கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் வரிசையில் காத்திருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.
* குற்றாலத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அருவியில் புனித நீராடினர். பின்னர் வாழை இலையில், எள், மாவு, காய்கறிகள் படைத்து, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
* புதுக்கோட்டையில் பாய்ந்தோடும், காவிரி ஆற்றங்கரையில் திரண்ட பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலிட்டு திதி கொடுத்தனர்.
* நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, யாகம் வளர்த்து, எள், நவதானியம், காய்கறி உணவு வகைகளை படைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.