மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்
* விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் சங்கரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.
* வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சில விதிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
* ஆனால் இதுவரை அந்த உத்தரவை அமல்படுத்தாமல், அரசு அதிகாரிகள் உதவியுடன் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருவதாக மதுரை வீரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
* இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் எம் சுந்தரேஷ், அடங்கிய அமர்வு, சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.