சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 2 நீதிபதிகள் உயர்வு | Chennai | ThanthiTV

Update: 2023-11-14 02:26 GMT

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர் குமார் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இருவரும் விரைவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து, காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்