இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-08-2023)

Update: 2023-08-10 17:57 GMT

இந்திராகாந்தியின் பெயரால்தான் கச்சத்தீவு இன்னொரு நாட்டிற்கு தாரை வார்க்கப்பட்டதாக மக்களவையில் பிரதமர் மோடி சாடல்....கச்சத்தீவை மீட்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாகவும் பேச்சு.... 

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை மாற்ற நினைக்கும் பாஜகவிற்கு, அரசியல் தெளிவு பெற்ற தமிழக மக்கள் துணை போக மாட்டார்கள்....திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேட்டி.... 

திமுக அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று பேசியுள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி ஆவேசம்.......ராஜாஜி, அப்துல்கலாம் பிறந்த தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து பேசுவதாகவும் குற்றச்சாட்டு....

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, இந்தியா கூட்டணி அல்ல, ஈகோ கூட்டணி என பிரதமர் மோடி காட்டம்.....ஊழல், குடும்ப அரசியல் தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம் என்றும் விமர்சனம்.... 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பிரம்மாண்ட பொய்...தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

1989ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி சிரித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.. அப்படிப்பட்ட திமுகவினர் தற்போது, திரௌபதி குறித்து பேசுவதாக மக்களவையில் ஆவேசம்

வடகிழக்கு மாநிலங்கள் இன்று சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாய் காங்கிரஸ் கட்சி தான்.. மக்களவையில் பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்.. பொய்யான தகவல்களை தெரிவித்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு

நம்பிக்கையில்லா தீர்மானம், நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிரான தீர்மானம் என்று பிரதமர் மோடி பேச்சு.. மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் விளையாட்டுகள் கூடாது என்றும் வலியுறுத்தல்

பிரதமர் ஒன்றரை மணிநேரம் கடந்து பேசியும், மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. பொய் பேசி, குப்பைகளை வீசி விட்டு வெளியேறுவது தான் எதிர்க்கட்சிகளின் வழக்கம் என பிரதமர் மோடி விமர்சனம்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது.. 2028ம் ஆண்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது நாடு பொருளாதார வளர்ச்சியில் 3ம் இடத்தில் இருக்கும் என்றும் பிரதமர் மோடி பேச்சு

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது

Tags:    

மேலும் செய்திகள்