மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் - அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேற்றம்
மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சன்கார்ப் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸூம் ஆஸ்திரேலியாவும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கப்படாததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 10 வாய்ப்புகள் வரை சென்று இந்தப் போட்டி சாதனை படைத்த நிலையில், பரபரப்பான போட்டியின் முடிவில் 7க்கு 6 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.