இன்றைய போட்டியில் ரோகித் - கோலிக்கு வந்த சோதனை | Virat | Rohit
உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இந்தியா இன்று வங்கதேசத்துடன் மோத உள்ளது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மமைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. சூப்பர்-8 சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் வெற்றி பெற்ற இந்தியா, வங்கதேசத்தையும் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த முனைப்பு காட்டும். பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சற்று தடுமாறினாலும் பவுலிங் பக்கபலமாக இருக்கிறது. குறிப்பாக தனது அபார பந்துவீச்சால் பும்ரா எதிரணியை திணறடித்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக அர்ஷ்தீப் சிங் செயல்பட்டு வருகிறார். அதே சமயம் கோலி-ரோகித் தொடக்க ஜோடி அதிரடி காட்டத் தவறுவதால் ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் வரும் பட்சத்தில் கோலி ஒன்-டவுன் செல்லக்கூடும். ஷிவம் துபே மற்றும் ஜடேஜா பேட்டிங்கில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வங்கதேச அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இருப்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.