வினோத் காம்ப்ளிக்கு உடல்நலம் பாதிப்பு - சச்சின் உதவ வேண்டும் - ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, உடல் நலம் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு மிகவும் கஷ்டப்படும் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளிக்கு 52 வயதாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வினோத் காம்ப்ளி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், வினோத் காம்ப்ளி மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள வினோத் காம்ப்ளிக்கு சச்சின் உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.