பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், அவரது எடையை சரிவர நிர்வகித்து இருக்க வே
ண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் எடையை தாங்கள்தான் சரியாக நிர்வகிக்க வேண்டும் என்றும், எடையை நிர்வகிப்பது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பொறுப்பு என்றும் பி.டி.உஷா கூறியுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மருத்துவக் குழுவினர் இதற்கு பொறுப்பாக மாட்டார்கள் என்றும், அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது சரியானதல்ல என்றும் தெரிவித்துள்ள பி.டி.உஷா, மருத்துவக் குழுவினரை விமர்சிப்பது கண்டனத்துக்கு உரியது எனக் கூறியுள்ளார்.