உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு இந்தப் போட்டி அரையிறுதிக்கு முன்பான பயிற்சிப் போட்டி போன்றதாகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்ட நிலையில், தொடரை வெற்றியுடன் முடிக்க ஆப்கானிஸ்தான் முனைப்பு காட்டக்கூடும்.