தடுமாற்றம் முடியுமா? - ஹாட்ரிக் வெற்றி தொடருமா? - சூடு பறக்கும் களம்

Update: 2024-04-12 02:58 GMT

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் லக்னோ - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் ஏக்னா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. குஜராத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்த கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணி, வெற்றியை தொடரும் முனைப்புடன் இன்று களம்காண்கிறது. மறுபக்கம், 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பும் அவசியத்தில் இன்று களம்காண்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்