சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான த்ரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில், தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து தேசிய அளவிலான 'த்ரீ எக்ஸ் த்ரீ' கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் என மொத்தம் 56 அணிகள் பங்கேற்றன. இதனிடையே, ஆடவர் இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை 17க்கு 16 என்கிற கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், மகளிருக்கான இறுதிப் போட்டியில், 20க்கு 15 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி கேரள அணி வெற்றி பெற்றது.