IND Vs ZIM T20ல் தமிழக வீரருக்கு மீண்டும் வாய்ப்பு

Update: 2024-07-06 06:04 GMT

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. சஞ்சு சாம்சன், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் சமீபத்தில்தான் இந்தியா வந்ததால், அவர்களால் இந்திய அணியுடன் இணைய முடியவில்லை. அவர்களுக்கு பதிலாக முதல் 2 போட்டிகளில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணியிலும் பல இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்