11 வருட உழைப்பு...21 வயதில் குவித்த கோப்பைகள் - நாட்டுக்காக விளையாட துடிக்கும் வீரனை முடக்கிய வறுமை
வறுமையால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார் தருமபுரியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்... இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
இந்தியாவிற்காக பதக்கங்களைக் குவிக்க வேண்டிய கரங்களை முடக்கிப் போட்டுள்ளது வறுமை...
தருமபுரி குமாரசுவாமி பேட்டையைச் சேர்ந்தவர் தான் 21 வயது விளையாட்டு வீரர் சியாம் சுந்தர்...
இவர் தர்மபுரி அரசு சட்ட கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்...
11 ஆண்டுகளாக டேக்வாண்டோ தற்காப்புப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்.. நூற்றுக்கணக்கான உள்ளூர், மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துள்ளார்...
கூலித் தொழிலாளியான தந்தை ஆறுமுகம் தான் குரு சியாம் சுந்தருக்கு...
மாநில போட்டிகளில் பலமுறை தங்கம் வென்ற போதும்...அடுத்து நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு செல்ல போதிய பணம் இல்லை இவரிடம்...
விரைவில் ஐதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றும் போக முடியாமல் தவித்து வருகிறார்..
தகுதி இருந்தும் நிதி இல்லாததால் முடக்கப்படுவதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை?...
அரசு உதவிக்கரம் நீட்டி... இந்த ஆர்வமிக்க இளம் விளையாட்டு வீரரை வளர்த்து விட்டால் நிச்சயம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உலகளவில் பெருமைத் தேடித் தருவார் என்பதில் சந்தேகமில்லை...