தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவு.. தங்க பதக்கங்களை குவித்து இந்தியா முதலிடம்

Update: 2024-09-13 23:10 GMT
  • சென்னையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில், 48 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம் பிடித்தது.
  • சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த, தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவடைந்தது.
  • தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்றன.
  • தொடரின் இறுதியில் 21 தங்கம் உட்பட 48 பதக்கங்களை வென்று பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.
  • தமிழகத்தை சேர்ந்த 7 வீரர் மற்றும் வீராங்கனைகள் 5 தங்கம், 2 வெள்ளி உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்றனர்.
  • பாகிஸ்தான் மற்றும் பூடான் ஆகிய 2 நாடுகளின் வீரர்கள் இறுதிவரை ஒரு பதக்கம் கூட வெல்லாமல் நாடு திரும்புகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்