தனது மகனை ஆரத்தழுவ வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உருக்கமாகப் பேசியுள்ளார். ஷிகர் தவான் - ஆய்ஷா முகர்ஜி தம்பதியர் விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்களுக்கு சோராவர் என்ற மகன் உள்ள நிலையில், அவரை ஆய்ஷா முகர்ஜி வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தனது மகன் சோராவரை சந்திக்க முடியவில்லை என தவான் வேதனை தெரிவித்துள்ளார். மகனுடன் நேரத்தை செலவிட விரும்புவதாகக் கூறியுள்ள தவான், கடவுள் விரும்பினால் ஒருநாள் தனது மகன் தன்னிடமே மீண்டும் வருவான் எனத் தெரிவித்துள்ளார்.