நான் சரியாக விளையாடாத போதும் என்னை தோனி ஆதரித்தார்.. நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்த தவான்!
- தான் தடுமாறியபோது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனக்கு உறுதுணையாக இருந்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தவான் கூறியுள்ளார்.
- தோனியுடனான நாட்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ள தவான், ஃபார்ம்-அவுட்டில் இருந்தபோது தோனி தனக்கு பல்வேறு சமயங்களில் ஆதரவாக இருந்ததாகப் பேசியுள்ளார்.
- தனது கேப்டன் தோனிக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
- வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி விக்கெட் எடுத்த பிறகு கொண்டாடிய விதம் கவனம் பெற்றது.
- ஹசன் மஹ்மது விக்கெட்டை வீழ்த்திய அஃப்ரிடி, தொட்டிலில் குழந்தையை ஆட்டுவதுபோல் செலபிரேட் (celebrate) செய்தார்.
- ஷாகீன் அஃப்ரிடிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு அர்ப்பணிக்கும் விதமாக அஃப்ரிடியின் கொண்டாட்டம் இருந்தது.