சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பி வழங்கப்பட்டதை, அவரது குடும்பத்தினர் நேரில் கண்டு மகிழ்ந்தனர். சர்ஃப்ராஸ் கானின் அறிமுக தொப்பியை கையிலேந்தி, அவரது தந்தை கண்கலங்கி முத்தமிட்டார். சர்ஃப்ராஸ் கானை அவரது தந்தையும், மனைவியும் கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.