10 ரன்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ வெற்றி - இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சான் ஃபிரான்சிஸ்கோ

Update: 2024-07-27 18:32 GMT

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற சேலஞ்சர் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சான் ஃபிரான்சிஸ்கோ வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சான் ஃபிரான்சிஸ்கோ 200 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

தொடர்ந்து 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெக்சாஸ் அணிக்கு கேப்டன் டூபிளஸ்ஸி அதிரடி தொடக்கம் தந்தார். 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்க, மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பினர். எனினும் கான்வே-ஜோஸ்வா ட்ரோம்ப் ஜோடி கடைசிவரை போராடியது. கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சான் ஃபிரான்சிஸ்கோ இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்