"நான் RCB உடன்.." - கடும் விரக்தியில் பேசிய பண்ட்

Update: 2024-05-15 08:42 GMT

பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில், தான் விளையாடி இருந்தால் தங்கள் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு அதிகமாகி இருக்கும் என டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். டெல்லி அணி தாமதமாக பவுலிங் செய்ததால் பெங்களூருவிற்கு எதிரான லீக் போட்டியில் விளையாட பண்ட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், லக்னோ அணியை வீழ்த்திய பிறகு பேசிய பண்ட், ஒருவேளை பெங்களூருவிற்கு எதிரானப் போட்டியில் தான் விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருப்போம் என்றும், பிளே-ஆஃப் வாய்ப்பு அதிகரித்து இருக்கும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்