ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணி, தமிழக அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 146 ரன்களும், மும்பை 378 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, 48வது முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.