பி.டி.உஷா மீது வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டு..

Update: 2024-09-12 06:52 GMT

ஒற்றை புகைப்படத்தை சுட்டிக்காட்டி ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவை விளாசி இருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்....

பாரிஸ் ஒலிம்பிக் 50 கிலோ மல்யுத்த இறுதிப்போட்டியில் வெறும் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டதால் பதக்க வாய்ப்பை அவர் இழக்க, இந்த நிகழ்வுகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஓய்வையும் அறிவித்த வினேஷ் போகத் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஹரியானா தேர்தலில் ஜூலானா தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இத்தகைய சூழலில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி உஷாவை விளாசித்தள்ளி இருக்கிறார் வினேஷ் போகத்...

தகுதி நீக்கம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வினேஷை சந்தித்த பி.டி.உஷா, புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த புகைப்படம்தான் தற்போது புதுப்பிரச்சினைக்கு வித்திட்டுள்ளது.

ஆம்... அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதே தனக்கு தெரியாது என்றும், தனது அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பி.டி.உஷா பகிர்ந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்