"2 கிலோ மீட்டர் ஓட அதிக நேரம் ஆகும்.." - முகமது ஹஃபீஸ் குற்றச்சாட்டு

Update: 2024-06-14 13:24 GMT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசாம் கானின் உடல்தகுதி குறித்து பல்வேறு தகவல்களை முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் பகிர்ந்துகொண்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று அசாம் கான், உடல் தகுதி தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், தான் அணியின் இயக்குனராக இருந்தபோதும் உடல் தகுதியில் அசாம் கான் ஆர்வம் காட்டவில்லை என முகமது ஹஃபீஸ் கூறியுள்ளார். 2 கிலோ மீட்டர் தூரத்தை மற்ற வீரர்கள் 10 நிமிடத்தில் அடைந்தால் அசாம் கான் 20 நிமிடங்களுக்கும் மேல் எடுத்துக்கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்