"இந்திய கிரிக்கெட் நிலைத்திருக்க பாகிஸ்தான் தேவையில்லை" - முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பேட்டி
இந்திய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தா விட்டால், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் என, முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், இந்திய அணி இல்லாமல் விளையாட விரும்பினால் பாகிஸ்தான் விளையாடட்டும் என்றும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் இல்லாமல் இந்திய கிரிக்கெட்டால் நிலைத்திருக்க முடியும் என்றும், இந்திய கிரிக்கெட் இல்லாமல் வாழ முடிந்தால் அதை செய்யுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.