பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.. இறுதிப்போட்டிக்கு சாத்விக் - சிராக் ஜோடி முன்னேற்றம்

Update: 2024-03-10 07:47 GMT

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி முன்னேறி உள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் ஜோடியான சியோ மற்றும் காங் ஜோடியை சாத்விக் - சிராக் ஜோடி எதிர்கொண்டது. இதில் அதிரடி காட்டிய சாத்விக் - சிராக் ஜோடி 21க்கு 13, 21க்கு 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தைவானின் யாங் - லீ ஜோடியை சாத்விக் - சிராக் ஜோடி எதிர்கொள்ளவுள்ளது.பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.. இறுதிப்போட்டிக்கு சாத்விக் - சிராக் ஜோடி முன்னேற்றம்

Tags:    

மேலும் செய்திகள்