மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

Update: 2024-05-16 10:58 GMT

ஒடிசாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில், முதல் வாய்ப்பில் 82 மீட்டரும், மூன்றாம் வாய்ப்பில் 81.29 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்தார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சமாக 82.27 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா, தங்கப்பதக்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் முதன்முதலாக சொந்த மண்ணில் கலந்து கொண்ட போட்டியில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். கர்நாடக வீரர் மானு, மகாராஷ்டிர வீரர் உத்தம் பாட்டீல் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்