நார்வே சர்வதேச செஸ் தொடர்...முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் வெற்றி | ViswanathanAnand
நார்வே சர்வதேச செஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். கிளாசிக்கல் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் லாக்ரெவ் உடன் விஸ்வநாதன் ஆனந்த் மோதினார். இதில் 40வது நகர்த்தலில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். முன்னதாக பிளிட்ஸ் பிரிவில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி மற்றும் லாக்ரேவிடம் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியைத் தழுவினார்.