T20 முடிந்ததும் கேன் வில்லியம்சன் எடுத்த முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

Update: 2024-06-19 09:41 GMT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி ஆகிய சிறிய அணிகளை மட்டும் வீழ்த்தியது. இந்நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். 2024-25ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் ஆடுவதற்கான மத்திய ஒப்பந்தத்தையும் வில்லியம்சன் மறுத்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அடுத்த சீசனில் வில்லியம்சன் சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேன் வில்லியம்சனின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்