உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்-மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்-தங்கம் வென்ற நெதர்லாந்து
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நெதர்லாந்து தங்கம் வென்றது. நெதர்லாந்து வீராங்கனைகள் சால்பெர்க், கிளாவெர், கேத்லிஜின், ஃபெமக் போல் ஆகியோர் அடங்கிய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 20 வினாடிகள் 72 மணித்துளிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. ஜமைக்கா வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்தையும் பிரிட்டன் வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.