கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்.. தமிழகத்திற்கு முதல் தங்கப் பதக்கம் | Khelo India Youth Games
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ரித்மேட்டிக் யோகா போட்டியில் தமிழகத்தின் தேவேஷ், சர்வேஷ் இணை 127 புள்ளி 57 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. 2வது மற்றும் 3வது இடங்களை முறையே மேற்கு வங்கத்தின் அவ்ரஜித் சகா - நில் சர்கார் இணையும், மகாராஷ்டிரத்தின் இன்க்ளோ - யாத்னேஷ் இணையும் வென்றன.