பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கேப்டன் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார். சஷாங் சிங்கின் கடைசிக்கட்ட அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 176 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளஸ்ஸி 3 ரன்களுக்கு வெளியேறினார். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடி கோலி அரைசதம் அடிக்க மறுமுனையில் சொற்ப ரன்களுக்க பெங்களூரு வீரர்கள் ஆட்டமிழந்தனர். 77 ரன்கள் அடித்து கோலியும் ஆட்டமிழக்க போட்டி பரபரப்பானது. கடைசி 2 ஓவர்களில் பெங்களூருவின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டபோது அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து அசத்தினார். 19 புள்ளி 2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து பெங்களூரு வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் வெற்றிக் கணக்கை பெங்களூரு தொடங்கி உள்ளது