இந்தியா - நியூசிலாந்து இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ரன்-அவுட் சர்ச்சை ஏற்பட்டது. நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர்ரை இந்திய வீராங்கனைகள் ரன் அவுட் செய்தனர். எனினும் dead ball எனக் கூறி நடுவர்கள் ரன்-அவுட் தர மறுத்தனர். இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முறையிட்டபோதும் நடுவர்கள் ரன்-அவுட் தரவில்லை. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பதிவிட்டு வரும் ரசிகர்கள் 2வது ரன்னுக்கு முன்பாக ஓவரை முடித்து நடுவர் தவறான முடிவை அறிவித்ததாக பதிவிட்டு வருகின்றனர்.