இன்று களமிறங்கும் இந்திய இளம் படை... காத்திருக்கும் தரமான சம்பவம்

Update: 2024-10-06 03:44 GMT

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் நாயர், ரியான் பராக், ரிங்கு சிங், பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சாம்சன்-அபிஷேக் நாயர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி, டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும் என்பதால் இந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்