இந்திய பவுலர் முகமது ஷமி பிறந்தநாள் இன்று...400+ விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷமி...

Update: 2023-09-03 13:51 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பிறந்த தினம் இன்று... இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 90 ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகளையும், 23 டி20 போட்டிகளில் 24 விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். கடந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமி வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட், ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். 33 வயதை எட்டியுள்ள ஷமிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்