இமாலய சாதனை படைத்த இந்திய அணி - பின் தங்கியுள்ள தென் ஆப்பிரிக்கா

Update: 2024-06-30 13:43 GMT

இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து இந்திய மகளிர் அணி டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீராங்கனை சூன் லஸ் அரைசதம் அடித்தார். மாரிசன் காப் 69 ரன்களுடனும் நாடின் டி கிளார்க் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா 367 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்