ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் அணிகள் பிரிவில் ஜோதி வென்னம், பர்னீத், அதிதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீன தைபேவுடன் இறுதிப் போட்டியில் மோதியது. இதில் இலக்கை துல்லியமாக குறிவைத்த இந்திய வீராங்கனைகள் 230க்கு 228 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடி, தங்கப்பதக்கத்தை முத்தமிட்டனர். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 82வது பதக்கமாக இது அமைந்துள்ளது.