இந்தியா-ஆஸி.அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர்..டேவிட் வார்னர் போட்ட போஸ்ட்...நெகிழ்ந்த ரசிகர்கள்

Update: 2023-09-21 02:18 GMT

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய நாட்களில் மொகாலி, இந்தூர், ராஜ்கோட் மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணியினர் இந்தியா வந்தடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிற்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எப்போதும் போல நாங்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்