ஐசிசி ஒருநாள் தரவரிசை.. டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்.. அவர்கள் யார் யார்..? | ICC Cricket

Update: 2023-09-14 01:58 GMT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 8-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, 29-வது இடத்திலிருந்து 27-வது இடத்திற்கு சென்றுள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா 7-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்